தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள நகரம் பகுதியை சேர்ந்தவர் சேவியர் பாண்டியன். இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி சுப்புலட்சுமி (60). தற்போது, கணவர் நடத்தி வந்த பண்ணையை மனைவி சுப்புலட்சுமி பராமரித்து வருகிறார்.
இந்நிலையில், சுப்புலட்சுமி பன்றிகளுக்கு உணவு வாங்குவதற்காக டாட்டா ஏசி வாகனத்தில் ஒட்டுநருடன் சென்றுள்ளார். அப்போது, நகரம் என்ற இடத்தில் ஓட்டுநர் வண்டியை நிறுத்திவிட்டு டீ குடிக்க சென்றுள்ளார்.
அந்த சமயம் பார்த்து, ஆட்டோவிலிருந்த சுப்புலட்சுமியை அடையாள தெரியாத சிலர் கத்தியால் குத்திவிட்டு அங்கியிருந்த நபர் தப்பி ஓடினர். சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சுப்புலட்சுமி அதே வாகனத்தில் கொண்டு சென்று சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து, தகவலறிந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், உயிரிழ்ந்த சுப்புலட்சுமி கணவர் சேவியர் பாண்டியனுக்கு இரு மனைவிகள் இருப்பதாக கூறப்படுகிறது.