பவானி அம்மாள் கோயிலில் 31 ஆம் ஆண்டு மகா பெரும் பூஜை திருவிழா தென்காசி:ஏழை எளிய மக்கள் நன்றாக இருக்கவும், செல்வம் செழிக்கவும், தீராத கடன் பிரச்சினை நீங்கவும், குழந்தை இல்லாமை உள்ளிட்ட பல பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்கள் வைத்து புளியங்குடியில் உள்ள முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தின் 31 ஆம் ஆண்டு மகா பெரும் பூஜை திருவிழாவில், சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே புளியங்குடியில் உள்ள முப்பெரும் தேவியர் பவானி அம்மாள் ஆலயம் அருள்வாக்கிற்கு பிரசித்தி பெற்ற கோயிலாக காணப்படுகிறது. இந்த ஆலயத்தில் நிகழும் மகா பூஜையில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வர்.
அதே போல இந்த வருடம் 31 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் மகா பூஜை திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் புளியங்குடி மட்டுமல்லாமல் விருதுநகர், தேனி, குமுளி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: "என் கருத்துகளை லைக் செய்தால் போதாது... ஷேர் செய்யுங்கள்.. உங்கள் விமர்சனம் ஆன்டி வைரஸ் அலர்ட்" - சமூகவலைதள தன்னார்வலர்கள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின்!
தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை அலங்காரம் நடைபெற்றது. மேலும் சக்தி அம்மாள் ஒரு கையில் அக்கினி சட்டியுடன் வந்த அனைத்து பக்தர்களுக்கும் அருள் வாக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஏழை எளிய மக்கள் நன்றாக இருக்கவும், செல்வம் செழிக்கவும், தீராத கடன் பிரச்சினை தீரவும், குழந்தை இல்லாமை, குழந்தை பாக்கியத்திற்காக காத்திருக்கும் பெண்களுக்கு மற்றும் கடன் தொல்லை தீர, வியாபாரத்தில் செல்வம் செழிக்க சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் நேரில் வந்து அம்மனை தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து அனைவருக்கும் அருள் வாக்கு வழங்கி ஆசி வழங்கப்பட்டது. மேலும் கோயில் வளாகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்ட இடங்களில் இருந்த பக்தர்களுக்கு அவர்கள் இடத்திற்கே நேரில் சென்று தீர்த்த தண்ணீர் தெளிக்கப்பட்டது.
மேலும் இந்த கோயிலில் ஒவ்வொரு வருடமும் பௌர்ணமி நாளன்று அம்மனுக்கு சுமார் ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். கோயிலில் சிறப்பு மகா பூஜையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு ஆசி பெற்று சென்றனர். கோயில் குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் திருவிழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்து இருந்தனர்.
இதையும் படிங்க: குற்றாலத்தில் விடுமுறை தினத்தையொட்டி அதிகரிக்கும் பயணிகள் வருகை!