தென்காசி: மாவட்ட தொழில் மையத்தின் மூலம் பயன்பெற்ற நிறுவனங்களை தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கேரளாவை பொறுத்தவரை குரங்கு அம்மை ஒரு சிலருக்கு ஏற்பட்டுள்ளதால் இதற்காக மத்திய அரசு சார்பில் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கேரளா எல்லையில் குரங்கு அம்மை பரிசோதனை?!! - Tamil Nadu Kerala Border
கேரளாவில் குரங்கு அம்மை பாதிப்பு காரணமாக தமிழ்நாடு கேரள எல்லை புளியரை அருகே சோதனை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தென்காசி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு கேரளா எல்லையில் குரங்கு அம்மை பரிசோதனை!!
அந்த குழு தற்பொழுது கேரளாவில் இருப்பதாகவும், மேலும் அந்த நிபுணர்கள் குழு தரும் அறிக்கைகளை கொண்டு தமிழ்நாடு கேரள எல்லை பகுதியான புளியரை அருகே தமிழ்நாடு சார்பில் சிறப்பு தடுப்பு சோதனை மையம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: கடையநல்லூர் அருகில் தோட்டத்தில் மனித எலும்புக்கூடு.. காவல் துறையினர் விசாரணை!