தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுமியைக் காதலித்து அத்துமீறிய இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது - man misbehaved at 16 years od girl arrested under POCSO

தென்காசி: 16 வயது சிறுமியைக் காதலித்து, அவரிடம் அத்துமீறிய இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்தனர்.

போக்சோ சட்டத்தின்கீழ் கைது
போக்சோ சட்டத்தின்கீழ் கைது

By

Published : May 15, 2020, 8:11 PM IST

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ராஜபாண்டி (வயது 20). இவர் அதே பகுதியைச் சேர்ந்த தனது உறவினர் மகளான 16 வயது சிறுமி ஒருவரைக் காதலித்து வந்துள்ளார்.

சிறுமியின் வயதைக் கருத்தில் கொண்டு, இந்தக் காதலை ஏற்காத சிறுமியின் பெற்றோர், ராஜபாண்டியை கண்டித்துள்ளனர். ஆனால் ராஜபாண்டி சிறுமியை தொடர்ந்து காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று, வீட்டில் தனியாக இருந்த சிறுமியை சந்தித்த ராஜபாண்டி, அவரிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதை கவனித்த அண்டை வீட்டினர் தொடர்ந்து சத்தம் போட்டதை அடுத்து, ராஜபாண்டி அங்கிருந்து தப்பியோடி உள்ளார்.

இதைத் தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், திருவேங்கடம் காவல் துறையினர் ராஜபாண்டி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இது குறித்து சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய அலுவலர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:சிறுமியை கடத்தி கல்யாணம் செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது!

ABOUT THE AUTHOR

...view details