தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோழிப் பண்ணையில் பதுக்கிவைத்திருந்த பல லட்சம் மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல்! - போதைப் பொருட்கள் பறிமுதல்

கடையம் அருகே கோழிப்பண்ணையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்களை காவல் துறையினர் பறிமுதல்செய்தனர்.

gudka_seized
gudka_seized

By

Published : Oct 17, 2020, 9:52 PM IST

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் போதைப் பொருள்கள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், கடையம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கடையம் வெய்க்காலிப்பட்டியைச் சேர்ந்த அண்ணாமலை என்பவருக்குச் சொந்தமான கோழிப்பண்ணையில் மூட்டை மூட்டையாக குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதை வஸ்துகள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதை காவல் துறையினர் கண்டுபிடித்தனர். இதன் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த கடையம் காவல் துறையினர் சம்பந்தப்பட்ட நபர்களைத் தேடிவருகின்றனர். இதில் முக்கியப் புள்ளிகளுக்கு யாருக்காவது தொடர்பு உள்ளதா எனவும் விசாரணை நடத்திவருகின்றனர்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக பெங்களூருவிலிருந்து திருநெல்வேலி வழியாக கேரளாவிற்கு, 2 லாரிகளில் கடத்த இருந்த போதை வஸ்துகளைக் காவல் துறையினர் பறிமுதல்செய்தனர். தற்போது கடையத்தில் கோழிப் பண்ணையிலிருந்து போதை வஸ்துகள் பறிமுதல் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க :இரு சக்கர வாகனம் திருடிய தம்பதி கைது

ABOUT THE AUTHOR

...view details