தென்காசி: சுரண்டை அருகே உள்ள கடையாலுருட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நல்லமுத்து. இரும்பு வியாபாரம் செய்துவந்தார். இவருக்கு ஒரு மகன், மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். இவர் கடந்த சில மாதங்களாகத் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால், வறுமையில் வாடிவந்துள்ளார்.
இதனால் நட்பு வட்டாரங்களில் கடன் வாங்கி, வாழ்க்கையை நடத்திவந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள் நல்லமுத்துவிடம் பணத்தைத் திரும்பக் கேட்டுள்ளனர்.
தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட இரும்பு வியாபாரி நல்லமுத்து இதனால் மன உளைச்சலுக்குள்ளான நல்லமுத்து, தனது தோட்டத்தில் உள்ள கிணற்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தகவலறிந்த சேர்ந்தமரம் காவல் துறையினர், உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என விசாரித்துவருகின்றனர்.
இதையும் படிங்க:கடன் பிரச்னையில் இளைஞர் கொலை: கணவன் மனைவிக்கு ஆயுள் தண்டனை