தென்காசி:செங்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட மேக்கரை வனப்பகுதியில் நீரோடைகளை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள தனியார் நீர்வீழ்ச்சிகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் அகற்றும் பணியானது நேற்று தொடங்கியது. இந்நிலையில், அப்பகுதியில் நேற்று மதியம் முதல் பெய்த தொடர் கனமழை காரணமாக நீர்வீழ்ச்சிகளை அகற்றும் பணியானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி தற்போது நீர்வீழ்ச்சிகளை அப்புறப்படுத்தும் பணியானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.