தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் புதிய தாலுக்கா அலுவலக கட்டடம் பொதுமக்கள் வசிக்கும் பகுதியிலிருந்து மிக தொலைவில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கடையநல்லூர் ஊராட்சி அருகில் புதிய கட்டடம் கட்டப்பட்டது.
இந்த கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களான நிலையில், இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. இதனை திறக்கக் கோரி கடையநல்லூர் மணிகூண்டு அருகே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான கே.ஏ.எம். முகம்மது அபூபக்கர் கலந்து கொண்டார்.