தென்காசி:தென் மாவட்டத்தில் பிரதான சுற்றுலாத்தலமாக விளங்கக் கூடியது குற்றாலம். தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது. இது தென்னகத்தின் 'ஸ்பா' எனக் கருதப்படுகிறது. அதற்கு காரணம் எவ்வளவு உடல்வலி, மனவலியோடு குற்றாலத்திற்கு வந்தாலும் அவை அனைத்து காணாமல் போய்விடும்.
தற்போது மழைக்காலம் துவங்கியும், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்து போன சூழலில் குற்றால சீசன் களையிழந்து காணப்பட்டது. அதாவது சீசன் காலகட்டங்களான ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களிலும் பொதுவாக நீர் பெருக்கெடுத்து ஓடும். அதற்காக சில நாட்கள் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை எனவும் அறிவிப்புகள் கூட வெளியாகும். ஆனால் அந்த அளவுக்கு கொட்டும் அருவியில் சில நாட்கள் மட்டுமே தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.