தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுத்தமாக இருக்க வேண்டிய பள்ளியின் சுற்றுப்புறத்துக்கே இந்த நிலையா..? - ஆதங்கத்தில் கிராம மக்கள்!

டி.ராமநாதபுரம் கிராமத்தில் பள்ளியின் அருகே மலை போல் குவிந்து கிடக்கும் குப்பையால் பள்ளி குழந்தைகள் மட்டும் இன்றி கிராம மக்களும் பாதிப்படைந்து உள்ளனர்.

In Ramanathapuram village near Tenkasi garbage piled up near the school is a health hazard
சுத்தமாக இருக்க வேண்டிய பள்ளியின் சுற்றுப்புறத்துக்கே இந்த நிலையா..?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 9, 2023, 11:00 PM IST

சுத்தமாக இருக்க வேண்டிய பள்ளியின் சுற்றுப்புறத்துக்கே இந்த நிலையா..?

தென்காசி: சிவகிரி அருகே உள்ளது டி.இராமநாதபுரம் கிராமம். இங்கு சுமார் 2000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் பெரும்பாலும் விவசாயம் செய்வது, கூலி வேலைக்கு செல்வதையே வழக்கமாக கொண்டுள்ளனர். டி.இராமநாதபுரம் பகுதி முழுவதும் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நைட்டி தொழில் அதிகமாக செய்யக்கூடிய பகுதியாக காணப்படுகிறது.

டி.இராமநாதபுரம் கிராமத்தில் எட்டாம் வகுப்பு வரை தனியார் பள்ளிக்கூடம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கூடம் பின்புற பகுதியில் குப்பை மலை போல் குவிந்து காணப்படுகிறது. மேலும் குப்பை மட்டும் இல்லாமல் பள்ளிகளில் பின்புறத்தில் இருந்தும் குப்பைகளை பள்ளியின் பின்புறத்திலேயே போடுகின்றனர். இதனால் இந்த குப்பை மேடு விஷப்பூச்சிகளுக்கு நிரந்தர வாழ்விடம் போல் ஆகிவிட்டது.

குப்பை மேட்டில் இருந்து, விஷப்பூச்சிகள் வீட்டிற்குள் வருவதால் உடனடியாக சுத்தம் செய்ய வேண்டுமென சுமார் ஆறுகாம் மாத காலமாக இந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் போராடி வருகின்றனர். மேலும், தேர்தல் சமயங்களில் நாங்கள் இதை செய்கிறோம் அதை செய்கிறோம் என்று பல்வேறு விதமான வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு செல்கின்றனர்.

நாங்கள் வென்று விட்டால் உங்களுக்கு குடிநீர் பிரச்சனை வாருகால் பிரச்சனை அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து வைப்போம் என வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றனர். ஆனால் தற்பொழுது எங்கள் கிராமத்தில் உள்ள பள்ளி அருகில் உள்ள குப்பையை கூட அள்ள முடியாமல் பஞ்சாயத்து நிர்வாகம் அலைக்கழித்து வருகிறது. மேலும் இதற்காக பலமுறை பஞ்சாயத்து நிர்வாகத்திடமும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் கோரிக்கை மனுவாக கொடுத்தும் தற்பொழுது வரை எந்தவிதமான பயன் அளிக்கவில்லை.

மேலும் எங்களுடைய சுற்றுவட்டார பகுதியில் அநேக குடும்பங்கள் வசித்து வருவதால் இந்த குப்பை மூலமாக நோய் பரவு அபாயம் உள்ளது. மேலும் குப்பை போட மட்டும் அல்லாமல் அதை தீ வைத்து விட்டு செல்வதால் வீட்டிற்கு உள்ளாக அதனுடைய புகை வருவதால் நோய் பரவும் அபாயமும், மூச்சுத் திணறலும் அதிகமாக ஏற்படுகிறது.

மேலும் இந்தப் பகுதியில் அதிகப்படியான வயது முதிர்ந்தவர்கள் வசித்து வருவதால் இதை உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இந்த பகுதியில் குப்பையை அப்புறப்படுத்த வேண்டும். மேலும் எங்களுடைய பகுதியில் ரோடு வசதி செய்து தரப்படும் என சொல்லியும் தற்போது வரை தெருவிற்கு ரோடு போடாமல் அலைக்கழித்து வருகின்றனர்.

பள்ளி அருகிலேயே குப்பை குவிந்து கிடப்பதால் குழந்தைகளின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகிறது. மேலும் குப்பையைக் கடந்து செல்லும் குழந்தைகள் அருகில் குப்பை மூடிக்கிடக்கும் கால்வாயில் விழக்கூடிய நிலையும் உள்ளது. சுத்தமாக இருக்க வேண்டிய பள்ளியின் சுற்றுப்புறமே இவ்வளவு அசுத்தமாக உள்ளது. குப்பையை அகற்றி குழந்தைகளுக்கு சுகாதாரமான சூழலை உறுதிப்படுத்த அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதையும் படிங்க: தேங்கும் மழைநீர்.. வடிகால்கள் எங்கே - எதிர்வரும் பருவமழையில் இருந்து தப்புமா தலைநகர்: மாநகராட்சி அளிக்கும் விளக்கம்?

ABOUT THE AUTHOR

...view details