தென்காசி: கடையநல்லூர் அருகே உள்ள வென்றிலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்துமாரி-வைரவசாமி தம்பதி. இவர்கள் இருவரும் வீரசிகாமணியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தால், ஒரே இருசக்கர வாகனத்தில் செல்வதும் வருவதும் வழக்கம். அந்த வகையில் நேற்றிரவு பணி முடித்துவிட்டு இருவரும் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தனர்.
தென்காசியில் மனைவி கண்முன்னே கணவர் அடித்துக்கொலை - Tenkasi murder case
தென்காசியில் மனைவி கண்முன்னே கணவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அப்போது, நடுவக்குறிச்சி அருகே காரில் வந்த கும்பல் தம்பதியை வழிமறித்து முத்துமாரி அணிந்திருந்த தங்க நகைகளை பறித்துள்ளது. இதனை தடுக்க முயன்ற வைரவசாமி மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் படுகாயமடைந்த வைரவசாமி சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த சேர்ந்தமரம் போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றினர். இதுகுறித்து முத்துமாரியிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க: விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் பிறந்தநாள் விழா...திமுகவினர் மரியாதை