தென்காசி மாவட்டம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு திடீரென இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து இரவு முழுவதும் பெய்த மழையால் குற்றாலம் மெயின் அருவியில் நள்ளிரவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதிலும் குறிப்பாக மெயின் அருவியில் ஆர்ச்சை தாண்டி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாகவும், மாலையில் பரவலாக மழையும் பெய்து வருகிறது.
விடிய விடிய மழை - குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு! - குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு
தென்காசி மாவட்டத்தில் நேற்றிரவு முதல் பெய்த கன மழையால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மழை
இதற்கிடையில் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் குற்றாலம் அருவிகளில், பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க:கோடை மழையால் மக்கள் குதூகலம்