தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாரிதாஸ் மீது நான்குப் பிரிவின் கீழ் வழக்கு!

நெல்லை: இஸ்லாமிய அமைப்புடன் கரோனா வைரஸ் தொற்றைத் தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் வீடியோவை வெளியிட்ட நபர் மீது காவல்துறையினர் நான்குப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மாரிதாஸ்
மாரிதாஸ்

By

Published : Apr 6, 2020, 12:31 PM IST

நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் பெரும் இழப்புகளை ஏற்படுத்திவருகிறது. வைரஸ் தொற்று மேலும் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. தமிழகத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான நபர்கள் டெல்லியில் கடந்த மாதம் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் பா.ஜ.க. ஆதரவு கருத்துகளைத் தெரிவித்து வரும் மாரிதாஸ், கரோனா வைரஸ் தொற்றோடு, இஸ்லாமிய அமைப்பை தொடர்புபடுத்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது.

இதைத் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தைச் சேர்ந்த இஸ்லாமிய அமைப்பினர், மேலப்பாளையம் காவல்நிலையத்தில் இஸ்லாமியர்களை அவமதிக்கும் வகையில் வீடியோ வெளியிட்ட மாரிதாஸ் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்யுமாறு புகார் அளித்தனர்.

இந்தப் புகாரின்பேரில், மேலப்பாளையம் காவல்துறையினர் நான்குப் பிரிவின் கீழ் மாரிதாஸ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க:ஊரடங்கு உத்தரவைப் பயனுள்ளதாக மாற்றும் ஆசிரியர்

ABOUT THE AUTHOR

...view details