தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தென்காசி மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா உறுதி - தென்காசி கரோனா பாதிப்பு

தென்காசி: தென்காசி மாவட்டத்தில், நேற்று ஐந்து பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாவட்டத்தில் கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 38ஆக உயர்ந்துள்ளது.

தென்காசி மாவட்டச் செய்திகள்  தென்காசி கரோனா பாதிப்பு  thenkasi corona affect
தென்காசியில் மேலும் 5 பேருக்கு கரோனா உறுதி

By

Published : Apr 26, 2020, 11:53 AM IST

தென்காசி மாவட்டத்தில், கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. சமய மாநாட்டுக்குச் சென்று திரும்பியவர்கள் மூலம் தென்காசி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு தொடங்கியது. புளியரை, நன்னகரம் ஆகிய இரண்டு பகுதிகளில் தொற்று உறுதி செய்யப்பட்டதால், அப்பகுதி ஹாட்ஸ்பாட் பகுதியாக அறிவிக்கப்பட்டது. புளியங்குடி பகுதியில் 20க்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தச்சூழ்நிலையில், நேற்று ஒரே நாளில் தென்காசி மாவட்டத்தில் ஐந்து பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், தென்காசியில் 11 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்ட்டு கண்காணிக்கப்படுவதாகவும் இதுவரை 1,537 நபர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதில், 73 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. தென்காசியில் நேற்று ஐந்து பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாவட்டத்தில் கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 38ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க:‘ஒன்றிணைவோம் வா’ - மக்களுடன் ஸ்டாலின் உரையாடல்

ABOUT THE AUTHOR

...view details