தென்காசி மாவட்டம், புளியங்குடியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கண்ணன் (40), இவரது மனைவி சீதாலெட்சுமி (31). இத்தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள், குடும்பத்துடன் சுரண்டை அருகே உள்ள குலையனேரி கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்துவருகின்றனர்.
இத்தம்பதியினருக்கு கடன் பிரச்னை இருந்ததாகக் கூறப்படுகிறது. கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமையால் ஏற்பட்ட மன அழுத்தத்தினால் கண்ணன், சீதாலட்சுமி இரண்டு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து தாங்களும் விஷமருந்தியுள்ளனர்.
இதுகுறித்து அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரியவவே 4 பேரையும் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.