திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு முன்விரோதம் காரணமாக இரண்டு திருநங்கைகள் உள்பட மூவர் கொல்லப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தென்காசி மாவட்டத்திலுள்ள திருநங்கைகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காவல்துறை, சமூக நலத்துறை சார்பில் விழிப்புணர்வு முகாம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
காவல்துறை துணை கண்காணிப்பாளர் கோகுல கிருஷ்ணன், துணை ஆட்சியர் குணசேகரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இதில் திருநங்கைகள் சிக்னலில் தர்மம் கேட்பது, பாலியல் தொழில் போன்றவைகளை தவிர்க்க வேண்டும். சமூக நலதுறை மூலம் திருநங்கைகளுக்கான அடையாள அட்டை பெற்று தையல் பயிற்சி, ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு போன்ற சுய தொழில்களில் ஈடுபடலாம்.
இதற்கான கடன் வசதி வழங்க மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. எனவே இதனை தாங்கள் பயன்படுத்தி சமூகத்தில் நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
மேலும் திருநங்கைகள் தங்களிடையே படித்த பட்டதாரிகள் இருப்பதாகவும் அவர்களை தேர்வு செய்து தகுதி அடிப்படையில் வேலை வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு விழிப்புணர்வு முகாம்!
தென்காசி: திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
திருநங்கைகள் விழிப்புணர்வு முகாம்
இந்நிகழ்ச்சியில் திருநங்கைகள், வியாபாரி சங்க பிரதிநிதிகள், காவல்துறையினர் கலந்து கொண்டனர்.