தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தென்காசியில் வாக்குச்சாவடிகளுக்கு வாக்கு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி தீவிரம்! - வாக்கு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி தீவிரம்

தென்காசி: சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ஆயிரத்து 884 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது.

வாக்கு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி தீவிரம்
வாக்கு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி தீவிரம்

By

Published : Apr 5, 2021, 6:45 PM IST

தென்காசி மாவட்டத்திலுள்ள ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் ஆயிரத்து 884 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 146 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்குத் தேர்தல் அலுவலர் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் காவல் துறை பாதுகாப்புடன் அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.

மேலும், தென்காசி மாவட்டத்தில் 143 நுண் பார்வையாளர்கள், ஆயிரத்து 584 காவல் துறையினர், 360 துணை ராணுவ வீரர்கள், 250 ஊர்காவல்படை ஆகியோர் தேர்தல் பணிப் பாதுகாப்பாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: திருவள்ளூர் வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு பொருள்கள் அனுப்பும் பணி: மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

ABOUT THE AUTHOR

...view details