தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஓட்டு கேட்டு வராதீங்க' -  பொதுமக்களின் பேனரால் பரபரப்பு - Tenkasi district news

தென்காசி: மேலக்கலங்கல் கிராமத்தில் 'வாக்கு சேகரிக்க யாரும் வரவேண்டாம்' என்று பொதுமக்கள் பேனர் வைத்துள்ளனர்.

தென்காசி மக்கள் வைத்த பேனர்
தென்காசி மக்கள் வைத்த பேனர்

By

Published : Mar 20, 2021, 7:16 AM IST

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில், தென்காசி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட மேலக்கலங்கல் கிராமத்தில் பொதுமக்கள் 'வாக்கு கேட்டு யாரும் வரவேண்டாம்' என பேனர் வைத்துள்ளனர்.

பதாகையில், அந்த ஊரில் பள்ளி மாணவர்கள் செல்லும் பாதை, மிக மோசமான நிலையில் உள்ளதாகவும், அப்பகுதி மக்களுக்கு நோய்த் தொற்று பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால், மக்கள் நோட்டாவுக்கு வாக்குளிக்க உள்ளதாகவும், யாரும் ஓட்டு கேட்டு வரவேண்டாம் என்றும் அதில் கூறியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details