தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பி.எஃப்.ஐ. நிர்வாகி வீட்டில் அமலாக்கத் துறை சோதனை: நிர்வாகிகள் குவிந்ததால் பரபரப்பு! - பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு

தென்காசி: பி.எஃப்.ஐ. நிர்வாகி வீட்டில் அமலாக்கத் துறை திடீரென சோதனை நடத்தியபோது அங்கு நிர்வாகிகள் குவிந்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டது.

ED raid in tenkasi PFI members house
ED raid in tenkasi PFI members house

By

Published : Dec 3, 2020, 6:08 PM IST

இந்தியா முழுவதும் ஒன்பது மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகளின் வீடு, அலுவலகங்களில் சுமார் 26 இடங்களில் அமலாக்கத் துறையினர் அதிரடியாக சோதனை நடத்திவருகின்றனர்.

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் ஐந்து இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்திவருகிறது. சென்னையில் மூன்று இடங்களிலும், மதுரை, தென்காசியில் ஒரு இடத்திலும் அமலாக்கத் துறை அலுவலர்கள் பாப்புலர் பிரெண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி தென்காசி மாவட்டம் பண்பொழி கிராமத்தில் வசித்து வரும் பாப்புலர் பிரெண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் முகமது அலி ஜின்னா வீட்டில் அமலாக்கத் துறை அலுவலர்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனையடுத்து இது குறித்து தகவலறிந்த அமைப்பு நிர்வாகிகள் அங்கு குவிந்ததோடு டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை தொடங்கியுள்ள நிலையில், போராட்டத்தை திசை திருப்புவதற்காகவும், பாஜக இவ்வாறு செயல்படுவதாக கூறி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கலைந்து செல்ல அறிவுறுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இதையும் படிங்க...ஒன்றா ரெண்டா வருஷங்கள் எல்லாம் சொல்லவே ஒருநாள் போதுமா?

ABOUT THE AUTHOR

...view details