தென்காசி: தென்காசி மாவட்டம், தமிழக-கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள புளியரை மோட்டார் வாகன சோதனைச் சாவடிகளில் அதிக அளவில் லஞ்சம் பெறுவதாக மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில், இன்று (அக்.19) அதிகாலை முதல் தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் மாற்று உடையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று இரவு பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளரான பிரேமா ஞானகுமாரி என்பவர் தனது பணியை முடித்துவிட்டு, தனது கணவரான ஷாட்சன் என்பவருடன் வீட்டிற்கு காரில் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து, தவணை விலக்கு அருகே லஞ்ச ஒழிப்பு போலீசார் பிரேமா ஞானகுமாரியை தடுத்து நிறுத்தி, அவர் கொண்டு வந்த பேக்கை சோதனை செய்துள்ளனர்.
இதையும் படிங்க:தூத்துக்குடியில் மண் சரிந்து குழியில் சிக்கிய 4 புலம்பெயர் தொழிலாளர்கள் மீட்பு - தனிப்படை போலீசாருக்கு பாராட்டு!