தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கனிமங்கள் எடுப்பதற்கான டெண்டர் அறிவிப்பு; “மத்திய அரசு தன்னிச்சையாக செயல்படுகிறது” - துரை வைகோ குற்றச்சாட்டு! - MDMK

Durai Vaiko against tender notice: தமிழகத்தில் கனிம வளங்களுக்கான சுரங்கம் அமைக்கும் பணி குறித்து தமிழக அரசிடமோ மாவட்ட நிர்வாகத்திடமோ எந்த ஒரு ஒப்புதலும் பெறாமல் மத்திய அரசு தன்னிச்சையாக செயல்படுவதாக மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

durai vaiko condemned notices for the construction of mines in seven places in Tamil Nadu
மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ பேட்டி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 4, 2023, 1:45 PM IST

மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ பேட்டி

தென்காசி:மாநில அரசிடம் ஒப்புதல் பெறாமலேயே தமிழகத்தில் ஏழு இடங்களில் கனிம வளங்களுக்கான சுரங்கம் அமைக்கும் பணிக்கான ஏல டெண்டர் அறிவிப்பு விளம்பரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. சமீபத்தில் சில நாளேடுகளில் ஒன்றிய அரசின் விளம்பரங்களில் இந்தியா முழுவதும் சுங்கத்துறை அமைச்சகம் மூலம் மத்திய அரசு முக்கிய கனிமங்கள் குறித்து ஆய்வு செய்தது.

இதில் தமிழகத்தில் ஏழு இடங்களில் இருக்கும் முக்கிய கனிமங்களைச் சுரங்கம் அமைத்து எடுப்பதற்கான மின் ஏலம் குறித்த டெண்டர் அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஒன்றியத்தைச் சார்ந்த குறிஞ்சாங்குளம் கிராமத்தில் கிராபைட் சுரங்கம் அமைப்பதற்காக 600 ஏக்கர் பரப்பளவில் 20 சுரங்கங்களை அமைப்பதற்கான திட்டம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: “திருச்சி விமான நிலைய பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது” - அமைச்சர் டி.ஆர்.பி ராஜா

இதுகுறித்து தென்காசியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, “இந்த சுரங்கம் அமைக்கும் திட்டம் குறித்து ஊர் மக்களிடமும் மாவட்ட நிர்வாகத்திடமும் மாநில அரசிடமும் எந்த ஒரு கலந்துரையாடலும் இல்லாமல் டெண்டர் குறித்த விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது. அப்பகுதி மக்களிடம் ஒப்புதல் வாங்கிய பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்தபட்சம் தமிழக அரசிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் கூட ஒப்புதல் பெறாமல் ஒன்றிய அரசு தன்னிச்சையாகச் செயல்படுத்தும் இந்தத் திட்டத்தைக் கடுமையாகக் கண்டிக்கிறேன்” என அவர் கூறியுள்ளார்.

மேலும் குறிஞ்சாங்குளம் மட்டுமன்றி சுரங்கம் அமைக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ள 7 இட மக்களுக்காகவும் தான் பேசுவதாகவும், முக்கிய நாளேடுகளில் இந்த விளம்பரம் வந்தும் எந்த ஒரு அரசியல் கட்சியும் இதுகுறித்து பேசவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்குத் தலைவர் வைகோ தான் முக்கிய காரணம் என்றும் தேனி மாவட்டம் நியூட்ரினோ ஆலையை நீதிமன்றம் மூலம் மூடவைத்ததும் அவர் தான் என்றும் கூறிய துரை வைகோ மக்களுக்கு கேடு விளைவிக்கும் திட்டமாக இருந்தால் கண்டிப்பாக அதை மதிமுக எதிர்க்கும் எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: வன விலங்குகளை விரட்டச் சென்ற மாமன், மைத்துனர் மின்சாரம் தாக்கி பலி..! ஆம்பூர் அருகே நடந்த சோகம்..!

ABOUT THE AUTHOR

...view details