ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிலைக்கு மாலை அணிவிக்க கூடிய திமுகவினரால் போக்குவரத்து பாதிப்பு! - தென்காசி திமுக

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த ஒரே இடத்தில் 200-க்கும் மேற்பட்ட திமுகவினர் திரண்டனர். இதனால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

tenkasi dmk traffic
tenkasi dmk traffic
author img

By

Published : Nov 7, 2020, 2:33 PM IST

தென்காசி:செங்கோட்டையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க ஒரே நேரத்தில் திரண்ட திமுகவினரால் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தமிழ்நாட்டில் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் திமுக விரைந்து செயல்பட்டுவருகிறது. அதன்படி நிர்வாக வசதிக்காக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுவருகின்றன.

அந்த வகையில் திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி மத்திய, தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு என நான்கு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு தென்காசியின் வடக்கு மாவட்டச் செயலாளராக துரை என்பவரை திமுக அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து புதியதாகப் பொறுப்பேற்ற தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளர் துரை இன்று 200-க்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் பேருந்து நிலையம் நுழைவாயிலிலுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மேலும், தொண்டர்கள் உற்சாகத்துடன் பட்டாசு வெடித்து கூட்டமாக கூடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details