தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பழங்குடி மக்களுக்கு பட்டா வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்!

தென்காசி: வன உரிமைச் சட்டத்தின்கீழ் பழங்குடி மக்களுக்கு பட்டா வழங்கக்கோரி 50-க்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

patta
patta

By

Published : Feb 9, 2021, 10:27 AM IST

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆதிவாசி மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் தமிழ்நாடு அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆதிவாசி மக்கள் விடுதலை முன்னணித் தலைவர் வைகறை தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்,

  • தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் வன உரிமைச் சட்டம் 2005இன்படி பழங்குடி மக்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை. எனவே உடனடியாக சமூக உரிமைகளின்படி பழங்குடி மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும்

உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் புளியங்குடி, வாசுதேவநல்லூர் பகுதிகளில் வரக்கூடிய மாதத்தில் சாலை மறியலில் ஈடுபடப்போவதாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு: மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!

ABOUT THE AUTHOR

...view details