தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சியில் அமைச்சர் ராஜலட்சுமி சுகாதார பணிகளை இன்று ஆய்வு செய்தார். இதையடுத்து சுகாதார பணியாளர்களுக்கு சானிடைசர் மற்றும் கை உறைகள் உட்பட பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை - அலுவலர்களுடன் அமைச்சர் ஆலோசனை - கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள்
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி பார்வையிட்டு அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
Adi Dravidar Welfare minister inspection in sankarankovil
பின்னர், நகராட்சி அலுவலகத்தில் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது சுகாதாரத் துறை, வருவாய் துறை, காவல் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், சங்கரன்கோவில் பகுதியில் கரோனோ வைரஸ் தொற்று தடுப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளப்படுகின்றனவா? ஊரடங்கு உத்தரவு முழுமையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பது குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்து, இனி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்தார்.