தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொடர் கனமழை: குற்றால அருவிகளுக்குச் செல்ல 4 நாள்களுக்கு தடை!

தென்காசி: தொடர் கனமழையின் காரணமாக குற்றாலத்திலுள்ள அனைத்து அருவிகளுக்கும் செல்ல பொதுமக்களுக்கு நான்கு நாள்கள் தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.

தொடர் கனமழை
தொடர் கனமழை

By

Published : Jan 14, 2021, 1:04 PM IST

தென்காசி மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளான தென்காசி, செங்கோட்டை, ஆலங்குளம், சுரண்டை, சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக இடைவிடாத தொடர் மழை பெய்துவருகிறது. மேலும், மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக குற்றால அருவிகளான மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதைபோன்று மாவட்டத்திலுள்ள நீர்த்தேக்க பகுதிகளான குண்டாறு, கடனா நதி, ராம நதி, ஆகிய மூன்று அணைகளும் முழு கொள்ளவை எட்டியுள்ளன. மேலும் அடவி நயினார், கருப்பா நதி உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.

தொடர்ந்து மழை நீடிக்கும் என சென்னை வானிலை மையம் தென் மாவட்டத்திற்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் தொடர் மழை நீடிக்கும் என்பதால் குற்றாலத்திலுள்ள அனைத்து அருவிகளுக்கும் பொதுமக்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர் கனமழை

இந்த தடை உத்தரவு இன்று (ஜன.14) முதல் ஜன.17ஆம் தேதிவரை நீடிக்கும் என மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார். மேலும் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், அணைகளின் கரையோர பகுதிகளில் குடியிருப்போர் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தென்காசி குற்றால அருவிகளில் குளிக்க நாளை முதல் அனுமதி - மாவட்ட நிர்வாகம்

ABOUT THE AUTHOR

...view details