தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருநெல்வேலியில் கரோனாவிலிருந்து குணமடைந்த 20 பேர்! - corona in tamilnadu

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்கள் 20 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

கரோனாவிலிருந்து குணமடைந்த 20 பேர் வீடு திரும்பினர்
கரோனாவிலிருந்து குணமடைந்த 20 பேர் வீடு திரும்பினர்

By

Published : Apr 23, 2020, 7:51 PM IST

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 60 பேர் கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் இன்று திருநெல்வேலியைச் சேர்ந்த 19 பேரும், தூத்துக்குடியைச் சேர்ந்த ஒருவரும் என 20 பேர் குணமடைந்தனர்.

கரோனாவிலிருந்து குணமடைந்த 20 பேர் வீடு திரும்பினர்

அவர்கள் அனைவரையும் இன்று மருத்துவக் கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன், 14 நாள்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார்.

மேலும், தற்போது பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் திருநெல்வேலியைச் சேர்ந்த 10 பேரும் தென்காசியைச் சேர்ந்த 29 பேரும் தூத்துக்குடியைச் சேர்ந்த ஒருவரும் என மொத்தம் 40 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தருமபுரியில் முதல் முதலாக கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி

ABOUT THE AUTHOR

...view details