தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தலையில் காயங்களுடன் சிகிச்சைப்பெற்ற பாதிரியார் பலி - அடித்துக் கொல்லப்பட்டாரா? - செங்கோட்டை

கேரளாவைச் சேர்ந்த பாதிரியர் செங்கோட்டை அருகே தலையில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில், கொலை செய்யப்பட்டாரா என வழக்குப் பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாதிரியர் பலி
பாதிரியர் பலி

By

Published : Dec 26, 2022, 10:36 PM IST

தென்காசி: கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர், தங்கச்சன் (வயது 65). கொல்லம் மாவட்டம், குளத்துப்புழா மற்றும் கறிக்குழி பகுதிகளில் உள்ள தனியார் கிறிஸ்தவ ஆலயங்களில் பாதிரியாராக சுமார் 35 ஆண்டுகள் பணியாற்றினர்.

கடந்த நவம்பர் 30-ஆம் தேதி பணி ஓய்வு பெற்றார். கேரளாவில் பணியாற்றிய போது, சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் தென்காசி மாவட்டம் செங்கோட்டை, விஸ்வநாதபுரத்தை அடுத்த மாவடிகால் தோப்பு பகுதியில் சொந்தமாக இடம் மற்றும் வீடு வாங்கியுள்ளார்.

பணி ஓய்வு பெற்றதும் அந்த வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். தங்கச்சனுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ள நிலையில், மகள் லீனா கனடாவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி வீட்டின் அருகில் உள்ள கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் மேய்ச்சலுக்கு சென்ற அவரது பசுவை அழைத்து வருவதாக வீட்டில் கூறி விட்டுச்சென்றவர், நீண்ட நேரம் கடந்தும் திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து அவரது மனைவி குஞ்சனம்மா கணவரைத் தேடி சென்றுள்ளார். அப்போது தங்கச்சன் சுயநினைவை இழந்து தரையில் விழுந்து கிடந்ததாக கூறப்படுகிறது. மகன் வர்கீஸ்சின் உதவியுடன் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் கணவரை குஞ்சனம்மா அனுமதித்துள்ளார்.

தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தங்கச்சன் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சாதாரணமாக தரையில் விழுந்தது போல் இல்லை என்றும்; யாரோ தலையில் தாக்கி தள்ளிவிட்டது போல் இருப்பதாகவும் கூறி செங்கோட்டை போலீசாருக்கு மருத்துவர்கள் தகவல் அளித்து உள்ளனர்.

சம்பவம் குறித்து விசாரணை நடத்த போலீசார் வருவதற்குள் தங்கச்சன் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். தந்தை இறந்தது குறித்து மகன் வர்கீசும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட இருந்த நிலையில் பாதிரியார் தங்கச்சன் பரிதாபமாக உயிரிழந்தது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தங்கச்சன் தலையில் கடுமையாக தாக்கப்பட்டதற்கான தடங்கள் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அவருக்கு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு முன் விரோதிகள் இல்லை என குடும்பத்தார் தெரிவித்ததாகவும், இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் குடிநீர் தொட்டியில் மலம்.. புதுக்கோட்டையில் பகீர் சம்பவம்

ABOUT THE AUTHOR

...view details