தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மந்தை திடலில் நகராட்சி மற்றும் காவல்துறையிடம் அனுமதி பெறாமல் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக பிப்ரவரி 18 முதல் போராட்டம் நடத்தி வருவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தென்காசி மாவட்ட இந்து முன்னணி செயலர் சிவா என்ற சிவானந்தம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் கடையநல்லூர் மந்தை திடல் நகராட்சிக்கு சொந்தமானது. அங்கு நகராட்சி, காவல்துறையிடம் அனுமதி பெறாமல் போராட்டம் நடைபெற்று வருகிறது. தடையை மீறி கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தி வருகின்றனர்.
சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டம்: கடையநல்லூரில் 6 வழக்குகள் பதிவு - சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டம்: கடையநல்லூரில் 6 வழக்குகள் பதிவு
மதுரை: தென்காசி கடையநல்லூரில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடுவோர் மீது ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் அரசுத் தரப்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இப்போராட்டத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும். அனுமதி பெறாமல் போராட்டம் நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஜெகதீஷ்சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு சார்பில் போராட்டக்காரர்கள் மீது ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவலர்கள் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மனுதாரரின் மனு மீது ஆறு வாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடையநல்லூர் காவல் ஆய்வாளருக்கு நீதிபதி உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.
இதையும் படிங்க:ஓய்வுபெறும் நேரத்தில் கையூட்டு பெற்று கைதான சமூகநலத் துறை விரிவாக்க அலுவலர்!