தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குற்றால அருவிகளில் கடும்வெள்ளப்பெருக்கு; 4ஆவது நாளாக இன்றும் குளிப்பதற்குத்தடை! - heavy flooding in Kutralam falls

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் குளிப்பதற்குத்தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

குற்றால அருவிகளில் கடும்  வெள்ளப்பெருக்கு; நான்காவது நாளாக இன்றும் குளிப்பதற்கு தடை
குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு; நான்காவது நாளாக இன்றும் குளிப்பதற்கு தடை

By

Published : Aug 4, 2022, 3:07 PM IST

தென்காசிமாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் மழை பெய்துவருகிறது. தென்காசி, செங்கோட்டை , குற்றாலம், கடையம், ஆலங்குளம் சுற்று வட்டாரப்பகுதிகளில் காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் குற்றாலத்தில் உள்ள பேரருவி, பழைய குற்றால அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது

குற்றால அருவிகளில் கடும்வெள்ளப்பெருக்கு; 4ஆவது நாளாக இன்றும் குளிப்பதற்குத்தடை!

மேலும் பேரருவியில் பாதுகாப்பு வளையத்தை கடந்தும், ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும், பழைய குற்றாலத்தில் படித்துறை வரையும் நீர் ஆர்ப்பரித்து வருவதால் சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்புக்கருதி அருவிகளில் குளிப்பதற்கு குற்றாலம் காவல் துறையினர் தடை விதித்துள்ளனர்.

தொடர்ந்து மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் மலை தொடர்வதால் குளிக்க முடியாமல் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்கின்றனர்.

இதையும் படிங்க:மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சம் கன அடி நீர் திறப்பு!

ABOUT THE AUTHOR

...view details