தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குற்றாலத்தில்  4ஆவது நாளாக பேரருவியில் குளிக்க தடை - Prohibition of taking a bath in the river

குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பேரருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 10, 2022, 12:58 PM IST


தென்காசி:தென் மாவட்டத்தின் பிரதான சுற்றுலா தளமான குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் சீசன் காலங்களாகும். இந்தாண்டு ஒரு மாதம் காலதாமதமாக ஜுன் மாத இறுதியில் சீசன் ஆரம்பமானது. சீசன் முடியும் தருவாயில் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து சீராக இருந்தது. சுற்றுலா பயணிகளும் உற்சாகமாக குளித்து வந்தனர். இந்த நிலையில் 3 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவி ஆகிய அருவிகளை தவிர பேரருவியில் மட்டும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை 4ஆவது நாளாக நீடித்துள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை எண்ணிக்கையும் குறைய தொடங்கியுள்ளது.

இதையும் படிங்க: கர்நாடகா அருகே பள்ளியில் மது அருந்திய ஆசிரியை பணியிடை நீக்கம்!

ABOUT THE AUTHOR

...view details