தென்காசி மாவட்டம் புலவனூர், பொன்மலை நகரைச் சேர்ந்தவர்கள் முத்தரசு, மகேஸ்வரி தம்பதியினர். கூலித் தொழிலாளியான மகேஸ்வரி, அப்பகுதியில் வசிக்கும் வைகுண்டமணியிடம் மாத சீட்டிற்குப் பணம் செலுத்தி வந்துள்ளார்.
தற்போது ஊரடங்கு காரணமாக வேலைக்குச் செல்ல முடியாததால் வருமானம் ஏதுமின்றி தவித்துவந்த மகேஸ்வரி, கடந்த மூன்று மாதங்களாகச் சீட்டுப் பணம் செலுத்தவில்லை. இதனால் அவரின் வீட்டிற்கு வைகுண்டமணி அடிக்கடி சென்று பணம் செலுத்தச் சொல்லி கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
நேற்றும் (ஜூலை 19) மகேஸ்வரியின் வீட்டிற்குச் சென்ற வைகுண்டமணி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை வெட்டிவிட்டுத் தப்பியோடினார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கடையம் காவல் துறையினர் படுகாயமடைந்த மகேஸ்வரியை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.