தென்காசி விவசாயத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் மாவட்டமாக இருந்துவருகிறது. ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்யும் தென்மேற்குப் பருவமழை இதுவரை தொடங்கவில்லை.
மேலும் மழைப்பொழிவு இல்லாத நிலையில் சுமார் 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணையில் 68 கன அடி நீர் மட்டுமே உள்ளது. இந்த அணையின் மூலம் வடகரை, அச்சன்புதூர், குத்துக்கல்வலசை, ஆய்க்குடி, சுரண்டை, கரிசல் உள்ளிட்ட 14 கிராமங்கள் வாயிலாக 7,500 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறுகின்றது.
இந்நிலையில் விவசாயிகள் பருவமழையை எதிர்பார்த்து கார்கால சாகுபடியை மேற்கொண்டுவருகின்றனர். மேலும் ஜூன் முதல் வாரத்தில் பெய்ய வேண்டிய மழை தாமதமாகிவருவதால் நடப்பட்ட நாற்றுகள் அனைத்தும் நீரின்றி கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே மீதமுள்ள நாற்றுகளைக் காப்பாற்றும் வகையில் அணையிலிருந்து போதிய அளவு தண்ணீர் திறக்க வேண்டும். மேலும் கருகிய நாற்றுகளை அலுவலர்கள் கணக்கிட்டு மீண்டும் விதைகளை மானிய விலையில் தர வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கைவைத்தனர்.
இதையும் படிங்க:'இன்றும், நாளையும் முழு ஊரடங்கு இல்லை என்பது பொய்யான தகவல்'