தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராணுவ வீரர் உயிரிழப்பு: சோகத்தில் கிராம மக்கள் - பணியின்போது ராணுவ வீரர் உயிரிழப்பு

தென்காசி: சங்கரன்கோவில் அருகே புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உயிரிழந்த குருசாமி
உயிரிழந்த குருசாமி

By

Published : Oct 17, 2020, 7:51 PM IST

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் பகுதியில் உள்ள புதுப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் மகன் குருசாமி (27). இவர் பஞ்சாப் மாநிலத்தில் ராணுவ வீரராகப் பணிபுரிந்துவருகிறார்.

இந்த நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பாக பணியின்போது ராணுவ வீரர் குருசாமி அவர் தங்கியிருந்த மாடியிலிருந்து தவறி விழுந்து காயம் ஏற்பட்ட நிலையில் சண்டிகர் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்துள்ளார்.

நேற்று முன்தினம் (அக்டோபர் 15) அவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக குடும்பத்தினருக்குத் தகவல் தரப்பட்டு உள்ளது.

இதையடுத்து உடனடியாக ராணுவ வீரர் தந்தை கோபாலகிருஷ்ணன் சண்டிகருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். இதற்கிடையில், குருசாமி இறந்துவிட்டதாக அவரது குடும்பத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது அவரது உறவினர்கள், அப்பகுதி கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details