தென்காசிமாவட்டம் ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர், சாந்தகுமாரி. இவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மதுரை மாவட்டத்திலிருந்து மாறுதலாகி ஆலங்குளத்திற்கு வந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே ஏற்பட்ட விபத்தால் அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு நேர பணியில் இருந்த காவல் ஆய்வாளர் சாந்தகுமாரி, கழிவறைக்குச் சென்று விஷம் குடித்துள்ளார். இதனையடுத்து சற்று நேரத்தில் மயங்கிய சாந்தகுமாரியை, சக காவல்துறையினர் மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.