சின்ன கலைவாணர் என்ற அழைக்கப்படும் நடிகர் விவேக் இன்று அதிகாலை உடல் நலக்குறைவு காரணமாக மாரடைப்பால் உயிரிழந்தார். சினிமாவில் தனக்கென்று தனி முத்திரை பதித்த நடிகர் விவேக் திடீரென உயரிழந்தது திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் நடிகர் விவேக் பிறந்த கிராமத்தில் அவரது இறப்பு செய்தியைக் கேட்டு கிராம மக்கள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
நடிகர் விவேக் மறைவு: சோகத்தில் மூழ்கிய சொந்த கிராம மக்கள் - சின்னக் கலைவாணர் விவேக்
தென்காசி: நடிகர் சின்னக் கலைவாணர் விவேக் மறைவால் சொந்த கிராமத்து மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
கிராம மக்கள் கூறுகையில்,"நடிகர் விவேக்கின் சொந்த ஊர் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள பெருங்கோட்டூர் பகுதியாகும். சொந்த ஊருக்கு வந்தால் ஊர் மக்களுடன் எளிமையாக பழககூடியவர் விவேக். அவரது இழப்பை தங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. விரைவில் நலம் பெற்று வருவார் என்று நம்பினோம். ஆனால் அவர் இறந்தது மிகவும் வருத்தமளிக்கிறது" என்று கண்ணீர் மல்க வேதனை தெரிவித்தனர்.
இதையும் படிங்க:'அறிவுப்பூர்வமான வசனங்கள் மூலம் மக்களை சிரிக்க வைத்தவர்’ - விவேக் இறப்புக்கு மோடி இரங்கல்