விவசாயிகளிடமிருந்து அரசே ஏன் கொள்முதல் செய்யக்கூடாதா? எனக் கேள்வி எழுப்பிய எம்பிஏ படித்த விவசாயி தென்காசிமாவட்டம், கடையநல்லூர் பகுதியில் பிரதானத் தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. இந்நிலையில் அங்குள்ள எம்பிஏ பட்டதாரியான விவசாயி ஒருவர், பல ஏக்கர் நிலத்தில் தக்காளி பயிரிட்டுள்ளார். தக்காளியானது நல்ல விளைச்சல் ஏற்பட்ட நிலையில் அதனை வியாபாரிகள் விவசாயிகளிடம் இருந்து கிலோ ரூ.15-க்கு கொள்முதல் செய்கின்றனர்.
ஆனால், மக்களிடம் கொண்டு செல்லுகையில் ரூ.60-க்கு மேல் விற்பனை செய்கின்றனர். இந்த ஆண்டு தக்காளி விவசாயத்திற்கு ரூ.20,000க்கு மேல்தான் செலவு செய்து உள்ள நிலையில் ரூ.4,000-க்கு கூட வருமானம் ஈட்ட வில்லை என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
மேலும், வியாபாரிகள் விவசாயிகளிடமிருந்து கொள்ளை லாபம் அடிக்கும் நிலையில் அரசு ஏன் விவசாயிகளிடமிருந்து நேரடி கொள்முதல் செய்யக்கூடாது எனவும் கேள்வி எழுப்பி உள்ளார். இச்செயல்கள் 'விவசாயியின் நெஞ்சைக் கீறி ஈரலை தின்னும் நிலையில்’ உள்ளதாக விவசாயி வேதனை மல்க தெரிவிக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ, 'விவசாயம் பண்ணா தூக்குலதா தொங்கணுமா?' என்ற கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: "நான் முதல்வன் திட்டத்தில் 15 லட்சம் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி" - TNSDC இயக்குனர்