தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி காவல்துறை வெளியிட்ட குறும்படம்!

தென்காசி: கிராமப்புறங்களில் கண்காணிப்பு கேமரா வைப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி தயாரிக்கப்பட்ட குறும்படத்தை நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபினபு பார்வையிட்டார்.

police
police

By

Published : Oct 16, 2020, 8:50 PM IST

தென்காசி மாவட்டத்தில் கடந்த நான்கு வருடங்களில் அடையாளம் தெரியாத நபர்கள் இருவர் தொடர்ந்து பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். அவர்களை பிடிக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் உத்தரவின் பேரில், உதவி காவல் கண்காணிப்பாளர் கோகுல கிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் குற்றவாளிகள் பிடிபட்டனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், கிராமப்புறங்களில் கண்காணிப்பு கேமரா இல்லாத பகுதிகளை நோட்டமிட்டு வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் நகைகளை கொள்ளையடித்தது தெரியவந்தது. இதில், பாதிக்கப்பட்ட 80க்கும் மேற்பட்ட பெண்களுக்கு நகைகள் மீட்டு வழங்கப்பட்டன.

இது தொடர்பாக தென்காசி மாவட்ட கிராமப்புறங்களில் கண்காணிப்பு கேமரா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நடந்த குற்றச் சம்பவங்களை மையப்படுத்தி தயாரிக்கப்பட்ட குறும்படத்தை பிரபல யூடியூப் சேனல் பக்கத்தில் (behindwoods air) தென் மண்டல காவல்துறைத் தலைவர் முருகன் வெளியிட்டார்.

தென்காசி காவல்துறை வெளியிட்ட குறும்படம்

இதை பார்வையிட்ட நெல்லை சரக பிரவீன்குமார் அபினபு, "இக்குறும்படம் பொது மக்களிடையே ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமையும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:'அண்ணா பல்கலை. உயர் சிறப்பு அந்தஸ்தை நிராகரித்தது தவறு!'

ABOUT THE AUTHOR

...view details