தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள அய்யாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கம்மாள்(54). இவரது கணவர் நாகராஜ் வெளியூர் சென்றுள்ள நிலையில், தங்கம்மாள் வீட்டில் தனியாக இருந்துவந்துள்ளார். இந்த நிலையில் நேற்றிரவு வழக்கம் போல் தனது வீட்டில் தூங்கியுள்ளார். அதிகாலையில் மர்ம கும்பல் ஒன்று வீட்டிற்குள் நுழைந்து வெட்டிப்படுகொலை செய்துவிட்டு தப்பிச்சென்றுள்ளது.
தென்காசியில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண் வெட்டி கொலை - mysterious killing in puliyangulam
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை கும்பல் ஒன்று வெட்டிப்படுகொலை செய்துள்ளது.
Etv Bharatவீட்டில் தூங்கிய பெண்ணை வெட்டி கொலை செய்த மர்ம கும்பல்
அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதனடிப்படையில் அங்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தீவிர விசாரணை நடந்துவருகிறது.
இதையும் படிங்க:CCTV: லிப்டில் சோமெட்டோ ஊழியரை கடித்த நாய்