தென்காசி மாவட்டம் கடையம் வனச்சரக பகுதியில் வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் வெளியேறி விளைநிலங்களையும், வீட்டு விலங்குகளையும் தாக்கி வந்தன. குறிப்பாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் கரடிகள் தோட்டங்களில் உள்ள மா, பலா, தென்னை, உள்ளிட்ட பயிர்களை மிகவும் சேதப்படுத்தி வந்தன.
இது குறித்து வனத்துறைக்கு புகார் வந்ததையடுத்து துணை இயக்குனர் கொம்மு ஓம்காரம் உத்தரவின்பேரில் பல்வேறு இடங்களில் கண்காணித்து கரடிகளை பிடிக்க வனத்துறையினர் கூண்டுகள் வைத்தனர். இந்நிலையில், ஏப்ரல் 29 முதல் ஜூன் 16 வரை நான்கு கரடிகள் சிக்கின.
இந்நிலையில் மீண்டும் பங்களா குடியிருப்பு தனியார் தோட்டத்தில் நேற்று நள்ளிரவு ஐந்து வயது மதிக்கத்தக்க கரடி ஒன்று வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.