தென்காசி மாவட்டத்தில் 5 தொகுதிகள் உள்ளன. இங்குள்ள மொத்தம் 1,884 வாக்குச்சாவடிகளில் நேற்று வாக்குப்பதிவு நிறைவடைந்தன. இதைத்தொடர்ந்து, வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட பெட்டிக்கு சீல் வைக்கப்பட்டது.
இதையடுத்து, கொடிக்குறிச்சி அருகே உள்ள தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு அப்பெட்டிகள் கொண்டு வரப்பட்டன. அங்கு வாக்கு இயந்திரங்கள் தொகுதிவாரியாக பிரித்து வைக்கப்பட்டன. மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான சமீரன் தலைமையில், வேட்பாளர்கள் முன்னிலையில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்ட வாக்கு பெட்டிகளுக்கு சீல் வைக்கப்பட்டது.