விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பெண்கள் குறித்தும், இந்து மதம் குறித்தும் சமீபத்தில் சர்ச்சைக்குரிய வகையில் அவதூறாக பேசியதாக அவருக்கு எதிராக பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் புதிய பேருந்து நிலையம் முன்பு பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி சார்பில் இன்று (அக்.27) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.