தென்காசி: தென்காசி மாவட்டம் புளியங்குடி வனப்பகுதியில் இரண்டு வயதான ஆண் குட்டி யானை, உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது தொடர்பாக வனத்துறையினர், பிரேத பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு குட்டி யானையை நல்லடக்கம் செய்தனர்.
தென்காசி மாவட்டம், புளியங்குடி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் புலி, சிறுத்தை, யானை, கரடி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில், கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் அதிகப்படியான கனமழை பெய்து வருகிறது. இதனால், அப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் பாதுகாப்பு இன்றி காணப்படுகிறது. கனமழை காரணமாக வனவிலங்குகளுக்கு உடல் நலக்குறைபாடும் ஏற்படுகிறது.
இதனால் வனத்துறையினர், புளியங்குடி, சிவகிரி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், நேற்று (ஜன.9) சங்கரன்கோவில் வனச்சரகத்திற்கு உட்பட்ட வாசுதேவநல்லூர், செல்லுப்புளி பீட் வட்டக்கன்னி பகுதியில், வனப்பணியாளர்கள் மற்றும் வனக் காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.