சிவகங்கை: கீழடி, அகரம், மணலூர், கொந்தகை ஆகிய பகுதிகளில் நடைபெற்றுவரும் அகழாய்வு பணிகள், அங்கு கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை பார்வையிட கீழடியில் பொது மக்களுக்கு இன்று அனுமதி அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வருகை தந்து கீழடியை சுற்றிப்பார்த்துச் சென்றனர்.
கொந்தை, கீழடி பகுதியில் கிடைத்த மண்பாண்ட பொருட்களான சுடுமண் முத்திரை, நம் முன்னோர்கள் நெசவுக்கு பயன்படுத்திய தக்களி என்னும் நூல் கோர்க்கும் கருவி, பெண்கள் காதில் அணியும் அழகிய வேலைப்பாடுகள் உடைய சுடுமண் காதணிகள், கூர்மையான பென்சில் போல் வடிவம் கொண்ட எலும்பு புள்ளி, சுடுமண் விளையாட்டு ஆட்டக்காய்கள், சங்கு வளையல்கள் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டது.