சிவகங்கை:சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயிலில், வைகாசி விசாக பிரமோத்ஸவ விழாவை முன்னிட்டு உடல் முழுக்க கருப்பு சாயம் பூசி திகிலூட்டும் உருவம் மற்றும் மிரட்டும் கழுவனை, விரட்டி திகிலூட்டும் கழுவன் திருவிழாவில் உற்சாகமடைந்த இளைஞர்கள். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்று, திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.
முன்னதொரு காலங்களில், நின்றசீர் நெடுமாறன் பாண்டிய நாட்டினை ஆட்சி செய்யும் பொழுது சமண சமயத்தை ஆதரித்தார். அப்பொழுது பாண்டிய மகாராணியான மங்கையற்கரசியாரும், பாண்டிய மந்திரி குலச்சிறையாரும் மட்டுமே சைவ சமயத்தினை கடைப்பிடித்தார்கள். பாண்டிய மகாராணி அழைப்பினை ஏற்று திருஞான சம்பந்தர் பாண்டிய நாட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது அவர் தங்கியிருந்த மடத்திற்கு சமணர்கள் மந்திரத்தால் நெருப்பு வைத்துள்ளனர். இந்த கொடுஞ்செயலுக்கு துணைநின்றமைக்காக பாண்டிய மன்னன் மீது கடும் கோபம் கொள்கிறார். இதன் காரணமாக பாண்டிய மன்னன் வெப்பு நோயால் பாதிக்கப்படுகிறார். சமணர்கள் பெரிதளவில் முயன்றும் பாண்டிய மன்னனின் நோயை குணப்படுத்த முடியவில்லை.
இதனால் பெரிதும் கவலைநிலையுடன் மகாராணி பாண்டிய மன்னனின் நோயை குணப்படுத்த, திருஞான சம்பந்தரை அழைக்கிறார். மகாராணியின் அழைப்பை விடுத்து திருஞான சம்பந்தரும் திருநீற்று பதிகம் பாடி திருநீற்றை தந்து பாண்டிய மன்னனின் நோயை குணப்படுத்துகிறார். தீராத நோய் குணமாகியதால் மன்னன் சைவ சமயத்தை தழுவி பின்பற்றுகிறார். இதனால் கோபமுற்ற சமணர்கள் புனல் வாதம் எனப்படும் ஓடும் நதியில் ஏடுகளை இடும் போட்டிக்கு சைவர்களை அழைத்தனர்.
இதில் தோற்றால் மன்னன் தங்களை கழுவேற்றலாம் என்ற விதியுடன் நடைபெற்ற போட்டியில், சமணர்களின் ஏடுகள் நீரில் அடித்து சென்றுள்ளன. திருஞான சம்பந்தரின் ஏடுகள் எதிர்திசையில் மிதந்து வந்துள்ளன. இதனையடுத்து திருஞான சம்பந்தர் அந்தப் போட்டியில் வெற்றி பெற்றார். இந்த போட்டியில் தோல்வியடைந்த சமணர்களை கழுவேற்ற பாண்டிய மன்னன் ஆணையிட்டதாகவும் பெரியபுராணம் கூறுகிறது. இந்த புராதனக் கதைகளை நினைவுகூறும் வகையில் இந்த கழுவன் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது.