சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நடிகர் ரஜினிகாந்த் காஷ்மீர் பிரச்னையை வரவேற்றது அவரை தேசத்தின் மீது நலன் கொண்டவராகக் காட்டுகிறது என்றும், ப.சிதம்பரத்தை பூமிக்கு பாரமாக இருப்பவர் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தது சரியானதே என்றும் கூறினார்.
‘நரிக்கு நாட்டாமை கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடுகள் கேட்கும்’ - எச்.ராஜா
சிவகங்கை: செய்தியாளர்களிடம் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை குறித்து பேசிய எச்.ராஜா, நரிக்கு நாட்டாமை கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடுகள் கேட்கும் என காட்டமாக விமர்சித்துள்ளார்.
"நரிக்கு நாட்டாமை கொடுத்தால் கிடைக்கு இரண்டாடு கேட்கும்" - எச். ராஜா பேட்டி!
அதேபோல், கார்த்தி சிதம்பரம் அனுபவம் இல்லாமல் நாடாளுமன்றத்திற்குச் சென்றுள்ளதாகக் கூறியுள்ள அவர், பள்ளிக்கல்வித்துறை ஆணையர் கண்ணப்பன் பள்ளி மாணவர்கள் கைகளில் கயிறு, நெற்றியில் பொட்டு வைக்கக்கூடாது என்று வெளியிட்ட சுற்றறிக்கையை வாபஸ் பெற வேண்டும் என்றும், நரிக்கு நாட்டாமை கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடுகள் கேட்கும் எனவும் தெரிவித்தார்.