சேலத்தில் இன்று தமிழ்நாடு பொதுப்பணித்துறை பொறியாளர் சங்கம், உதவிப் பொறியாளர் சங்கங்களின் ஒருங்கிணைந்த மாநில மைய செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு அரசின் அரசாணை எண் 328 ரத்து செய்வது, ஊதிய முரண்பாடு தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் நியாயமான கோரிக்கையை எடுத்துரைப்பது, பொதுப்பணித் துறையில் இருக்கும் பணிச்சுமையை கருத்தில் கொண்டு ஆட்குறைப்பு நடவடிக்கைகளை அரசு எடுக்க கூடாது, உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஐஏஎஸ் அதிகாரிகள் தலையீடு கூடாது - பொதுப்பணித்துறை பொறியாளர் சங்கம்
சேலம்: ஐஏஎஸ் அதிகாரிகளின் தலையீடு இல்லாமல், சுதந்திரமாக அரசுப் பொறியாளர்கள் செயல்பட தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பொதுப்பணித்துறை பொறியாளர் சங்கம், உதவிப் பொறியாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இதன் பின்னர் பொறியாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் அன்பு செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர்கள் ஐஏஎஸ் அதிகாரிகளின் தலையீடு இல்லாமல் சுதந்திரமாக செயல்பட, முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏழாவது ஊதியக்குழு, ஆறாவது ஊதியக் குழு ஆகியவற்றின் முழு பணப்பயன்களையும் பொறியாளர்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேறாத பட்சத்தில் விரைவில் போராட்ட அறிவிப்புகளையும் செய்ய இருப்பதாகவும் அவர் எச்சரித்தார்.
மாநில செயற்குழு கூட்டதத்தில், தமிழ்நாட்டின் அனைத்து தொழிலாளர் சங்கங்களின் கிளைகளிலிருந்து 200க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.