சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டையை சேர்ந்தவர் மல்லிகா. இவர் பீர்கலைகாட்டில் உள்ள கால்நடை மருத்துவமனையில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் இவர் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 15 பவுன் நகையையும், மூன்று லட்சம் ரூபாயையும் அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர். இதுகுறித்து மல்லிகா சாக்கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
தொடர் திருட்டில் ஈடுபட்ட தாய், மகன் கைது! - mother and son
சிவகங்கை: காரைக்குடியில் நான்கு மாதங்களுக்கு முன்பு வீட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தொடர்புடைய தாயையும் மகனையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரோகித் நாதன் உத்தரவின் பேரில் காரைக்குடி டி.எஸ்.பி அருண் தலைமையில் சிறப்புப் படை அமைக்கப்பட்டது. சாக்கோட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், காரைக்குடியை சேர்ந்த சாந்தியையும் அவரது மகன் நாகராஜனையும் சாக்கோட்டை சிறப்புப் படையை சேர்ந்தவர்கள் கையும் களவுமாக பிடித்து நகைகளை மீட்டனர்.
விசாரணையில் இவர்கள் மீது பல்வேறு மாவட்டங்களில் 60க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புள்ளது தெரிய வந்தது. அவர்களிடம் மீட்கப்பட்ட நகை மற்றும் பணத்தை டி எஸ் பி அருண் உரியவர்களிடம் வழங்கினார்.