தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆட்சியர் அறை வாயிலில் மேற்கூரை உடைந்து விழுந்தது!!

சிவகங்கை ஆட்சியர் அறையின் வாயிலில் உள்ள வராண்டாவின் மேற்கூரையின் காரை விழுந்து விபத்து ஏற்பட்ட நிலையில் அதிர்ஷ்டவசமாக யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது

ஆட்சியர் அறை வாயிலில் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து
ஆட்சியர் அறை வாயிலில் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து

By

Published : Oct 11, 2022, 7:52 PM IST

சிவகங்கை ஆட்சியர் அலுவலக வளாகமான மாஸ்டர் பிளான் காம்ப்ளக்ஸ் கடந்த 1988ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த வளாகத்தில் ஆட்சியர் அலுவலகம், எஸ்.பி அலுவலகம், பொதுப்பணிதுறை அலுவலகம் உள்ளிட்ட 36 துறை சார்ந்த அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.

இதில் ஆட்சியர் அறையை தாண்டி உள்ளே கூட்டங்கள் நடத்த ஏதுவாக கூட்டரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இன்று மருதுபாண்டியர்களின் குருபூஜை சம்பந்தமாக ஆலோசனை கூட்டமானது ஆட்சியர் மதுசூதன் ரெட்டி மற்றும் எஸ்.பி செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற நிலையில் ஏராளமான சமூக தலைவர்கள் பங்கேற்றனர்.

ஆட்சியர் அறை வாயிலில் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து

இந்நிலையில் ஆட்சியர் அறையின் வாயிலில் உள்ள வராண்டாவின் மேற்கூரையிலிருந்து கான்கிரீட் காரை திடிரென விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அப்பகுதியில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கிருந்த ஊழியர்கள் இடிந்து விழுந்த கட்டிட கழிவுகளை அகற்றினர்.

இதையும் படிங்க: சிவகங்கை அருகே மூதாட்டி கம்பியால் அடித்து கொலை - ஒருவர் கைது

ABOUT THE AUTHOR

...view details