சிவகங்கை:ஜ.பி.எல். கிரிக்கெட் போட்டியை தனியார் டி.வி. நிறுவனங்கள் குத்தகைக்கு எடுத்து ஒளிபரப்பி வருகின்றன.
இந்நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை சிவகங்கை அருகே உள்ள காஞ்சிரங்கால் பிள்ளையார்கோயில் தெருவைச் சேர்ந்த ராமமூர்த்தி (29) என்பவர் அனுமதி பெறாமல் தனி செயலி மூலம் ஒளிபரப்பியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இதுதொடர்பாக ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்த கடாரம் துப்பா (36) என்பவர் ஹைதராபாத் சைபர் கிரைம் காவல்துறையிடம் புகார் செய்துள்ளனர். இதன் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதன் அடிப்படையில் சைபர் கிரைம் காவல் சார்பு ஆய்வாளர் ரவீந்தர் தலைமையில் காவலர்கள் சுனில், திருமாவேலன், குபேந்தர், மணிகண்டா ஆகியோர் சிவகங்கை வந்து ராமமூர்த்தியை கைது செய்தனர். பின்னர் அவரை சிவகங்கை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஹைதராபாத்துக்கு அழைத்துச் சென்றனர்.
பணிகள் எதுவும் இல்லாததால், ராமமூர்த்தி இவ்வாறு செய்து காவல் துறையில் சிக்கியது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: வருங்கால கணவரை, கண்ணாமூச்சி ஆட அழைத்து கழுத்தறுத்த பெண்!