சிவகங்கை மாவட்டத்தில் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து தண்ணீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண மாவட்ட நிர்வாகம் நீர் மேலாண்மைக்கு முக்கியத்தும் அளித்து வருகிறது. மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் பொறுப்பேற்ற மூன்றே மாதத்தில் 4,900 வரத்து கால்வாய்களை தூர்வாரியதால் மத்திய அரசின் உயரிய விருதை பெற்றார். சிவகங்கையில் தண்ணீர் பிரச்னையை தீர்க்க ஆட்சியரின் தந்தை ஜெகதீஸ்வரன்(80) நீர் மேலாண்மைக்கு உதவி புரிந்து வருவதாகக் கூறப்படுகிறது.
நீரூற்று பார்க்கும் கலெக்டரின் தந்தை! - இப்ப அவர் ரொம்ப பிஸி! - collector father
சிவகங்கை: மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தனின் தந்தை துல்லியமாக நீரூற்று பார்த்து கொடுப்பதால் ஏராளமானோர் அவரை நாடுகின்றனர். ரயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் தற்போது படு பிஸியாகியுள்ளார்.
ஜெகதீஸ்வரன் ரயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது நீரூற்றுப் பார்ப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். பல்வேறு பகுதிகளில் ஆழ்குழாய் கிணறு அமைத்ததில் தண்ணீர் கிடைக்காமல் போனது. ஊற்று பார்ப்பதில் ஜெகதீஸ்வரன் வல்லவராகத் திகழ்வதால், சிவகங்கை மக்கள் இவரை அழைத்துச் சென்று ஊற்றுப் பார்க்கத் தொடங்கியுள்ளனர். இதுவரை 60-க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் அமைக்க இலவசமாக ஊற்று பார்த்து கொடுத்துள்ளாராம்.
மேலும், ஆழ்குழாய் கிணறு அமைப்பவர்கள் ஏராளமானோர் ஆட்சியரின் தந்தை ஜெகதீஸ்வரனை அழைத்து செல்வதால் 80 வயதிலும் துல்லியமாக நீரூற்று பார்ப்பதில் படு பிஸியாகி வருகிறார்.